தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவிக்கு பாராட்டு

 மாணவிக்கு பாராட்டு

 மாணவிக்கு பாராட்டு


ADDED : ஜன 28, 2026 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 07:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி மங்களம் பள்ளியில் படித்து, 'நீட்' தேர்வில் தேர்ச்சிப் பெற்று அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவிக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

புவனகிரி மங்களம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பூரணி என்ற மாணவி மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு தேவையான 'நீட்' தேர்வில் மிகச்சிறந்த 'கட்-ஆப்' மதிப்பெண் பெற்று விழுப்புரம் மாவட்டம், முண்டியபாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.

அந்த மாணவி, மற்றும் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, நிர்வாகி தமிழ்மணி, செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் சால்வை அணிவித்து, ஊக்கப்பரிசு வழங்கி வாழ்த்தினர்.

அப்போது பள்ளி ஆசிரியர்கள்,பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் உடனிருந்தனர். அப்போது மாணவி பூரணி நீட் தேர்விற்கு ஆயத்தமாக வேண்டிய வழிமுறைகள் குறித்து சக மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us