/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குருஞானசம்பந்தர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
குருஞானசம்பந்தர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 07, 2025 02:25 AM

சிதம்பரம்: சிதம்பரம் குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சிதம்பரம், கனகசபை நகர் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
தடகளப் போட்டியில் சத்யஸ்ரீ தங்கப்பதக்கம், சதுரங்கப் போட்டியில் சுதன்ராஜ் தங்கப்பதக்கம். வலைப்பந்து போட்டியில் தவனேஷ் தங்கப்பதக்கம், எறிபந்து குழுப் போட்டியில் சந்தோஷ் முதலிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
இவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி செயல் தலைவர் சுவேதகுமார், பள்ளி பொருளாளர் தர்பாரண்யன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன், ஆசிரியை செல்வி, பானுஸ்ரீ உடன் இருந்தனர்.