/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் உலக அமைதி வேண்டி பிரார்த்தனை
/
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் உலக அமைதி வேண்டி பிரார்த்தனை
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் உலக அமைதி வேண்டி பிரார்த்தனை
ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரியில் உலக அமைதி வேண்டி பிரார்த்தனை
ADDED : செப் 28, 2024 06:55 AM

கடலுார் : கடலுார் ஆர்.எம்., மஹாவீர் ஜூவல்லரி நிறுவனர் மஹாவீர்மல் மேத்தாவின், மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தில்சுக்மல் மேத்தா தலைமை தாங்கினார். இதில், மஹாவீர்மல் மேத்தா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, உலக அமைதி வேண்டியும், ரஷ்யா, இஸ்ரோல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் போரை கைவிட வேண்டி ஊழியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடை உரிமையாளர்கள் ஆனந்த்குமார், விஜயகுமார், சித்தார்த், சுஷில்குமார், பெரியார் கலைக்கல்லுாரி பேராசிரியர் குணாளன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.