/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி தர்ணா
/
கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி தர்ணா
ADDED : ஏப் 04, 2025 05:02 AM

கடலுார்: வேலைக்கு சென்று மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில, கர்ப்பிணி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.புளியங்குடியை சேர்ந்தவர் அன்பரசன் மனைவி பிரமிளா, 28; இவர், நேற்று காலை கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரமிளா, அன்பரசனும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பிரமிளா 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் வேலைக்கு சென்ற அன்பரசன் வீடு திரும்பவில்லை.
குமராட்சி போலீஸ் ஸ்டேஷன், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. கணவரை கண்டுபிடித்து தரக்கோரி தர்ணாவில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று, பிரமிளா கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்துவிட்டு, புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

