தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தபால் ஓட்டு பெற ஆயத்த பணிகள் தீவிரம் 

 தபால் ஓட்டு பெற ஆயத்த பணிகள் தீவிரம் 

 தபால் ஓட்டு பெற ஆயத்த பணிகள் தீவிரம் 


ADDED : ஏப் 07, 2026 05:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 05:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தபால் ஓட்டு பெறுவதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதற்காக கடலுார் மாவட்டத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடலுார் தொகுதியில் ஓட்டுச்சாவடி மையத்திற்கு நேரில் வந்து ஓட்டளிக்க முடியாத, 85 வயது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுப் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடலுார் தொகுதியில் தபால் மூலமாக ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்த, 773 மாற்றுத்திறனாளிகள், முதியவர்களிடம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கீடு செய்ததும், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களிடம் நேரில் சென்று தபால் ஓட்டு பெறப்படும்.

இதற்கான ஆயத்த பணிகள் கடலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. குறிப்பாக, ஓட்டுச்சாவடி மையங்கள் வாரியாக விண்ணப்பங்கள் பிரிக்கும் பணி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us