தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டு எண்ணிக்கை மையத்தில்  முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 ஓட்டு எண்ணிக்கை மையத்தில்  முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 ஓட்டு எண்ணிக்கை மையத்தில்  முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


ADDED : ஏப் 11, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 11:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

சட்டசபை தேர்தலையொட்டி, கடலுார் மாவட்டத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது. கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் நடக்கிறது. இதற்காக அங்கு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான அறைகள் தயார் செய்யப்படுகிறது. இங்கிருந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வருவதற்கான தனி வசதி, முகவர்கள் வந்து செல்வதற்கான வழி உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us