ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ADDED : ஏப் 18, 2026 03:36 PM

கடலுார்: கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மே, 4ம் தேதி நடக்கிறது. கடலுார் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் நடக்கிறது.
இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் அறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு வருவதற்கான தனி வழி, முகவர்கள் வந்து செல்வதற்கான வழி, கண்காணிப்பு கோபுரம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
