ADDED : அக் 12, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.,சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், என்.எஸ்.எஸ்.,அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
என்.எஸ்.எஸ்.,மாணவர்கள் ஊரின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மஞ்சள் துணிப்பையை கொடுத்தனர்.