/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்ட விவசாயிக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்
/
கடலுார் மாவட்ட விவசாயிக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்
கடலுார் மாவட்ட விவசாயிக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்
கடலுார் மாவட்ட விவசாயிக்கு ஜனாதிபதி பாராட்டு சான்றிதழ்
ADDED : ஆக 04, 2025 01:35 AM
கடலுார் : தேசிய அளவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்ததற்காக கடலுார் மாவட்ட விவசாயிக்கு ஜனாதிபதியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கலைவாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் வரும் 15ம் தேதி நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கடலுார் மாவட்டம், ஆயிக்குப்பத்தை சேர்ந்த விவசாயி ரங்கராஜூக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து வந்த அழைப்பிதழை, கடலுார் தெற்கு உட்கோட்ட அஞ்சல் ஆய்வாளர் வடிவேலன், அஞ்சல் ஊழியருடன் சேர்த்து ரங்கராஜியிடம் நேரிடையாக வழங்கினார். தேசிய உணவு எண்ணெய் வித்து இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் எண்ணெய் வித்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்தற்காக ரங்கராஜ் பாராட்டுப் பெற்றவர். இதன் மூலம் தேசிய அளவில் உணவு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளார்.