/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிரைம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
/
பிரைம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
பிரைம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
பிரைம் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை
ADDED : மே 16, 2025 02:41 AM

சிறுபாக்கம்: வேப்பூர் பிரைம் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., தேர்வில் சாதனை படைத்தனர்.
வேப்பூர் பிரைம் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ) பள்ளி மாணவர்கள், நடப்பாண்டில் நடந்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.
பிளஸ் 2 தேர்வில் மாணவி ஆயிஷா 441 மதிப்பெண் பெற்று முதலிடம், சுஜித் 430 பெற்று இரண்டாமிடம், ஹரிஷ் கிருஷ்ணா 429 பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.
10ம் வகுப்பு தேர்வில் ஷான்மதி 474 மதிப்பெண் பெற்று முதலிடம், அமிர்தா 463 பெற்று இரண்டாமிடம், அப்சனா 461 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
400க்கும் மேல் 10 பேர் மதிப்பெண் பெற்றனர். 10ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதமும், பிளஸ் 2 வில் 99 சதவீத தேர்ச்சியும் பெற்று பள்ளி சாதனை படைத்துள்ளது.
சாதனை மாணவர்களை, பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்தினார். பள்ளி அறங்காவலர்கள், முதல்வர் உடனிருந்தனர்.