/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., விரிவாக்க திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
/
என்.எல்.சி., விரிவாக்க திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
என்.எல்.சி., விரிவாக்க திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
என்.எல்.சி., விரிவாக்க திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
ADDED : பிப் 17, 2024 06:28 AM

நெய்வேலி : ராஜஸ்தான் மாநிலத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய என்.எல்.சி., பர்சிங்சார் சூரிய ஒளி மின்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
என்.எல்.சி., நிறுவனம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
ராஜஸ்தான் மாநிலத்தில், ரூ.1,756 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்க உள்ள என்.எல்.சி., பர்சிங்சார் சூரிய ஒளி மின்திட்டத்திற்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, பேசுகையில், 'சூரியஒளி மின்சக்தியை உற்பத்தி செய்வதில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இத்திட்டங்கள், இப்பகுதிக்கு பசுமை மற்றும் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதோடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கும்' என்றார்.
'ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிட்' என்ற நிறுவனத்துடன், செலவு குறைந்த மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் 52 காசுகள் என்ற கட்டணத்தில், 300 மெகாவாட் மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தத் திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் 'ஆத்ம நிர்பர் பாரத்' முன்முயற்சியுடன் இணைந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உயர் திறன் கொண்ட இருமுக வகையிலான, உள்நாட்டு சூரிய ஒளித் தொகுதிகளைப் பயன்படுத்துகிறது.
அதன் வாழ்நாளான 25 ஆண்டுகளில் இத்திட்டம் 18.75 பில்லியன் யூனிட் பசுமை மின் ஆற்றலை உருவாக்கும். 18 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வை குறைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை, மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் ஊக்கம் மற்றும் ஆதரவு, மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆதரவு மற்றும் நிலக்கரி அமைச்சகத்தின் தடையற்ற ஆதரவு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையின் நல் ஒத்துழைப்பு மற்றும் சிறப்பான பங்களிப்பினால் இந்த அடிக்கல் நாட்டு விழா மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கு பிரதமரின் ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்காக என்.எல்.சி., இந்தியா நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.