/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி அறிவுரை

ADDED : ஆக 19, 2025 07:33 AM

விருத்தாசலம் : படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமென, பள்ளி மாணவர்களுக்கு நீதிபதி அன்னலட்சுமி அறிவுரை வழங்கினார்.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் 'போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு தடை சொல்வோம்' என்ற தலைப்பில் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சவுபர்ணிகா, ஆர்த்தி, மாஜிஸ்திரேட்கள் அரவிந்தன், அன்பழகன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
நீதிபதி அன்னலட்சுமி பேசுகையில், 'போதைப்பொருட்கள் அறிவை அழித்து விடும். 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அடுத்து பெரிய சமுதாயத்தை நோக்கி செல்கிறீர்கள். சரி எது, தவறு எது என முடிவெடுக்க வேண்டும்.
எந்த பிரச்னையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இலக்கு நிர்ணயித்து பயணிக்க வேண்டும். அப்போது, கடவுள் உங்கள் பிரார்த்தனைக்கு ஏற்ப நல்லதையே செய்து கொடுப்பார்.
டாக்டர் என கனவு காணும் சிலர், அது கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்கின்றனர். அது முற்றிலும் தவறு. மனதுக்கு நிறைவாக படித்தால் போதும்.
உங்கள் வாழ்க்கையை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள். என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை மாணவர்களே தீர்மானிக்க வேண்டும்' என்றார்.