ADDED : ஜன 31, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மத்திய சிறைக்கைதி நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், கம்மாளங்குளத்தைச் சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ஆதிநாராயணன்,32. இவர் பாளையங்கோட்டை சிறையில் குண்டர் தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த நவம்பர் 16ம் தேதி, பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து, கடலுார் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவருக்கு நேற்றுமுன்தினம் மாலை நெஞ்சுவலி ஏற்பட்டதால், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.