/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பஸ்கள் ஓடாது
/
கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பஸ்கள் ஓடாது
கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பஸ்கள் ஓடாது
கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பஸ்கள் ஓடாது
ADDED : டிச 23, 2024 04:58 AM
கடலுார்: கொத்தட்டை சுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடலுார்-சிதம்பரம் சாலையில் இன்று பஸ்களை இயக்காமல் முற்றுகை போராட்டம் நடத்த தனியார் பஸ் உரிமையாளர் நலச்சங்கம் முடிவு செய்துள்ளது.
விழுப்புரம்-நாகப்பட்டிணம் 4 வழிச்சாலையில் கடலுார்-சிதம்பரம் வழித்தடத்தில் உள்ள கொத்தட்டை சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்ணயித்துள்ள சுங்கக் கட்டணம் தமிழகத்தின் மற்ற சுங்கச்சாவடிகளை விட அதிகமாக உள்ளதாக, பஸ் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சுங்கக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கொத்தட்டை சுங்கச்சாவடி திறக்கப்படும் நாளான இன்று (23ம் தேதி) சுங்கச்சாவடியில் பஸ்களை நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவது என, கடலுார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் முடிவு செய்தனர்.
இப்போராட்டம் காரணமாக கடலுாரில் இருந்து சிதம்பரம் செல்லும் 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இன்று (23ம் தேதி) இயங்காது எனவும், இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என, சங்க மாவட்ட செயலாளர் தேசிங்குராஜன் தெரிவித்துள்ளார்.

