ADDED : ஜூன் 18, 2026 04:22 AM
கடலுார்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம்மாதம் 19ம் தேதி, புதுப்பாளையத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இம்முகாமில் 15, க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. முகாமில், 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
