தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 தனியார் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : டிச 15, 2025 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுபாக்கம்: கடலுார் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம், மங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். முகாமில், 119 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், 604 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அரசு செயலாளர் வீரராகவ ராவ், துறை இயக்குனர் பழனி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தாசில்தார் செந்தில்வேல், முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், தி.மு.க., ஒன்றிய செயலர் செங்குட்டுவன், பி.டி.ஓ., சண்முக சிகாமணி, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us