ADDED : மே 15, 2026 04:05 AM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: தனியார் சர்க்கரை ஆலை ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லிக்குப்பம், தனியார் சர்க்கரை ஆலையில் சாராய வடி ஆலை பிரிவில் கடந்த 20 ஆண்டுகளாக நிரந்தர பணியாளராக கடலுார், வில்வநகரை சேர்ந்த பரங்குன்றம்,58; பணியாற்றி வந்தார்.
நேற்று வழக்கம் போல் அவர் பணியில் இருந்த போது மாலை 4:00 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக சக ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
உடனே அவரை, கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரங்குன்றனை சோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர். பணியில் இருக்கும் போதே பணியாளர் இறந்ததால் ஆலையில் பதட்டம் நிலவியது.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
