ADDED : மார் 28, 2026 11:31 PM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொறியாளர் சுதாகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதில், மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில், கட்டுரை, பேச்சு, ஓவியம், மாறுவேட போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், 2025 - 2026ம் கல்வியாண்டில் அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் 100 சதவீதம் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சிவகாமி நன்றி கூறினார்.
