/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

ADDED : அக் 10, 2025 03:45 AM

நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் சிட்டி கிளப் மற்றும் கடலூர் மாவட்ட பூப்பந்து நலச் சங்கம் இணைந்து நடத்திய கடலூர் மாவட்ட பூப்பந்து சாம்பியன்ஷிப்- 2025, போட்டிகள் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 5, வரை நெய்வேலியில் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 9 வயதுக்குட்பட்டவர்கள் முதல் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியை, மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், அவர்கள் தொடங்கி வைத்தார். லிக்னைட் சிட்டி கிளப் தலைவர் அசோக் தத்தாத்ரயா கியோட்,என்.எல்.சி., மனித வளத்துறை பொது மேலாளர் ஓ.எஸ்.அறிவு,CDBWA சேர்ந்த சிவகுருநாதன், முத்துக்குமரன், ஓம் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியை ஆதர்ஷ் ஸ்ரீவத்சா ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் இடம்பெற்றன, இதில் பங்கேற்பாளர்கள் மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் வெற்றியாளர்களுக்கு கோப்பைகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமை விருந்தினர், நகர நிர்வாகத்துறை பொது மேலாளர் வைத்தியநாதன், வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்,