ADDED : பிப் 05, 2026 06:43 AM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் மாவட்ட அளவிலான நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம், நெய்வேலி பவர் சிட்டி ரோட்டரி சங்கம்ஆகியன சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நெய்வேலியில் நடந்தது. 8,10,14 வயது என, 3 பிரிவுகளில் போட்டி நடந்தது.
450க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் பாலாஜி பரிசு வழங்கினார். விழாவில், சாணக்யா செஸ் அகடாமி ஒருங்கிணைப்பாளர் வினோத், ரோட்டரி சங்க தலைவர்கள் சீனிவாசன், சரவணகுமார், மண்டல செயலாளர் நாராயணமூர்த்தி, ரோட்டரி சங்க செயலாளர் சந்திரமவுலி, ரோட்டரி சங்க நிர்வாகிகள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.போட்டிகளை சாணக்யா செஸ் அகடாமி நடத்தினர்.
