ADDED : மார் 12, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாளையொட்டி கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேட்டுக்குப்பம் ஆர்ச்சில் மாரத்தான் போட்டி துவங்கி மந்தாரக்குப்பம் புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசு ரூ 5,000 ரூபாய், கோப்பை, நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் வழங்கி பாராட்டினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
