தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதில்...  சிக்கல்

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதில்...  சிக்கல்

உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதில்...  சிக்கல்


ADDED : நவ 29, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே பெற்ற அனுபவ சான்றிதழை ஏற்றக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு உயர் கல்வித்துறை சார்பில் கடந்த, 2019ல், 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை, நிரப்ப அரசு அறிவிப்பை வெளி யிட்டது.

இதற்கு தகுதி உடைய, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பம் செய்தனர். மேலும், கல்லுாரியில் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. ஆனால் அந்த பணியிடங்கள் இன்று வரை நிரப்ப படவில்லை.

அதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த, 2022ம் ஆண்டு நவ. 8ம் தேதி மற்றும் கடந்த, 2024ம் ஆண்டு, மார்ச்.14,ம் தேதியில் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில், கடந்த 2019ல் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து விட்டு புதிய அறிவிப்பு வந்தது.

இதனால் மறுபடியும் அனைவரும் விண்ணப்பித்தனர்.

கடந்த, 2019ல் தேர்வு கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை என சரிவர கூறாததால் கடந்த, 2024 மற்றும் இந்தாண்டில்,

மீண்டும் விண்ணப்பிக்கும் போது பலருக்கு தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது கடந்த, அக்.16ம் தேதியன்று 2,078 காலிப்பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்த புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழுவின், 2018 மற்றும், 2023 அறிவிக்கையின்படி உதவி பேராசிரியர் தேசிய தகுதி தேர்வு அல்லது முனைவர் பட்ட தேர்ச்சி இருந்தால் போதுமானது.

ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் புதியதாய் எழுத்து தேர்வு நடத்துவதில் பல்வேறு சிரமங்களை உருவாக்கி உள்ளது.

தேர்வு எழுதுவோர் முதலில் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும். பிறகு அவருடைய பாடத்தில் அதிக மதிப்பெண் பெற வேண்டும்.

மேலும் மாலை நடைபெறும் தேர்வில், 50 மதிப்பெண்களுக்கு ஒரே கேள்வி, அவர்களது பாடத்திட்டத்தில் இல்லாமல், பொதுவான நடைமுறை தலைப்புகளில் கேட்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தேர்வு முடிந்த பின்பு நேர்முகத்தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பணி அனுபவ சான்றுகள், கடந்த, 16ம் தேதிக்கு பிறகு பெறப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதால் கடந்த, 2019ல் விண்ணப்பித்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு பல்வேறு கல்வி நிறுவனங்களில் அலைந்தும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல போக்குவரத்து செலவு செய்தும் காத்திருந்து சான்றிதழ் பெற வேண்டியதாக உள்ளது.

ஏற்கனவே பெற்ற அனுபவச்சான்றிதழ்கள் தற்போது செல்லத்தக்கது அல்ல எனக் கூறியதால் மீண்டும் அனைவரும் தாங்கள் பணியாற்றிய அனைத்து கல்லுாரிகளுக்கும் சென்று மீண்டும் அனைத்து சான்றிதழ்களையும் திரும்பப் பெற வேண்டி உள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் சான்றிதழ்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே கடந்த, 2019ல் பெறப்பட்ட அந்த அனுபவ சான்றிதழையே விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனுபவ சான்றிதழ் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய கூறியுள்ளதால் விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.

அதனால், பணி அனுபவ சான்றிதழ் பதிவேற்றம் செய்வதை தற்போது தவிர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அனுபவ சான்றிதழ் பெறுவதற்காவே அலைய வேண்டியுள்ளதால் படிப்பதற்கு கால அவகாசம் குறைவாக உள்ளது.

கடந்த, 2019ம் ஆண்டு அக்டோபர் மற்றும் கடந்த,2024ம் ஆண்டு, மார்ச்சில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஆணையின் படி விண்ணப்பம் செய்தவர்கள் விண்ணப்ப அடிப்படையில் மதிப்பெண் மற்றும் வகுப்பு வாரியாக தரவரிசை தயார் செய்து சான்றிதழ் சரிபார்த்து பின்னர் நேர்முகத் தேர்வு நடத்துமாறு விண்ணபித்துள்ள ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us