/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மத்திய அரசு திட்டத்தில் கொள்முதல்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மத்திய அரசு திட்டத்தில் கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மத்திய அரசு திட்டத்தில் கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மத்திய அரசு திட்டத்தில் கொள்முதல்
ADDED : மார் 31, 2025 11:18 PM
கடலுார்; மத்திய அரசின் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டிற்கான உளுந்து மற்றும் பச்சைப் பயறு ஒருங்குமுறை கொள்முதல் விற்பனைக் கூடம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில் (NAFED) குறைந்தபட்ச ஆதரவு விலையில் உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்படுகிறது. இத்திட்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் நடப்பாண்டு உளுந்து 15,100 மெட்ரிக் டன், பச்சைப் பயிறு 445 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து விலை கிலோ ரூ.74 வீதம் குவிண்டால் ரூ. 7,400க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
உளுந்து விருத்தாசலம், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும். பச்சைப் பயறு விலை கிலோ ரூ.86.82 வீதம் குவிண்டால் ரூ.8,682க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
பச்சைப்பயிறு காட்டுமன்னார்கோயில் மற்றும் சேத்தியாதோப்பு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.
விற்பனைக்கு மூட்டைகளை எடுத்து வரும் முன் விவசாயிகள் சிட்டா, வி.ஏ.,ஓ., கையெழுத்திட்ட அடங்கல், ஆதார், வங்கி கணக்கு புத்தகம் நகல், மொபைல் போன் எண் ஆகியவையுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பதிவு செய்த வரிசை எண் அடிப்படையில் உளுந்து பயிர்கள் எடை வைத்து கொள்முதல் செய்யப்படும். இதற்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் விருத்தாசலம் - 9677563312, சேத்தியாத்தோப்பு - 9843137979, காட்டுமன்னார்கோவில் - 9500787325, குறிஞ்சிப்பாடி - 9976866364 ஆகிய எண்களில் தெரிந்து கொள்ளலாம்.