/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திட்டக்குடி மாணவர் கபடி அணிக்கு தேர்வு
/
திட்டக்குடி மாணவர் கபடி அணிக்கு தேர்வு
ADDED : அக் 10, 2024 03:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழக முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் வரும் அக்.,14ம் தேதி முதல் 18 வரை சென்னையில் நடக்க உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்கான கடலுார் மாவட்ட கபடி அணி கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சிதம்பரம், காடாம்புலியூர், துாக்கணாம்பாக்கம், பேர்பெரியாங்குப்பம், வி.காட்டுப்பாளையம், திட்டக்குடி அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 12பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
மாவட்ட அணியில் தேர்வாகி, மாநில போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் நிலவளவனை, தலைமையாசிரியர் ஜெய்சங்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் கருப்பையன், தங்கதுரை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

