/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சொத்து தகராறு: 8 பேர் மீது வழக்கு
/
சொத்து தகராறு: 8 பேர் மீது வழக்கு
ADDED : அக் 08, 2024 02:35 AM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் சரவண குமார், 53; வேல்முருகன், 63; சகோதரர்கள். இருவருக்குமிடையே பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. பிரச்னைக்குரிய இடத்தில் சரவணகுமார் பலா செடிகளை நட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், அவரது மகன் திருத்தணிமுருகன், மனைவி வேம்பாயி, ஆதரவாளர் பிரபாகரன் ஆகியோர் சரவணகுமார், அவரது மகன்கள் தரணிதரன், சசிதரன், மனைவி தங்கம் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், வேல்முருகன், சரவணகுமார் உட்பட 8 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.