ADDED : நவ 06, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி ேஹாஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் செயற்கை கால்கள் அளவீடு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
நகை வியாபாரிகள் சங்க தலைவர் கஜபதி, ஜெயின் சங்க தலைவர் மதன்சந்த், தொழிலதிபர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமினை தொழிலதிபர்கள் வைரக்கண்ணு, மோகனகிருஷ்ணன், துரை துவக்கி வைத்தனர்.
இதில் பதம் ஜீவல்லரி பதம்ராஜ், ஐஸ்வர்யா ேஹாம் நீட்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் 120 பங்கேற்றனர். இதில், 65 பேருக்கு செயற்கை கால் பொருத்த அளவு எடுக்கப்பட்டு செயற்கை கால்கள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

