/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜபக்கூடம் கட்ட எதிர்ப்பு: பண்ருட்டியில் பரபரப்பு
/
ஜபக்கூடம் கட்ட எதிர்ப்பு: பண்ருட்டியில் பரபரப்பு
ADDED : பிப் 14, 2024 03:57 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கிறிஸ்தவ ஜபக் கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள்போலீஸ் ஸ்டேஷனில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த திருநகரில் கிறிஸ்தவர்கள் சார்பில் ஜபக் கூடம் கட்ட, கடந்த 12 ஆண்டுக்கு முன்பு முயற்சித்தனர். அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று ஜபக் கூடம் கட்டுவதற்கான பணிக்காக செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை இறக்கி வைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு 7:00 மணிக்கு அப்பகுதி மக்கள் 20 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கண்ணனிடம் புகார் அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று கலைந்து சென்றனர்.

