ADDED : ஏப் 17, 2026 08:07 PM

கடலுார்: கடலுாரில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, கடலுாரில் அய்யப்பன் எம்.எல்.ஏ., தனது இல்லத்தில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றினார்.
தொடர்ந்து, கருப்பு பேட்ஜ் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், கட்டட தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், தி.மு.க., நிர்வாகிகள் தெய்வநாயகம், லட்சுமணன், செந்தில், ராஜா, சுந்தரம், ஆனந்த், ராஜேந்திரன், சிவப்பிரகாசம், வார்டு செயலாளர் சுப்ரமணி, சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
