/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு நடுவீரப்பட்டு அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 19, 2025 06:41 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது.
நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாளையம் ஊராட்சியில் மலையடிக்குப்பம் கிராமம் உள்ளது.
இங்கு, 165 ஏக்கர் பரப்பளவு அரசு தரிசு புறம்போக்கு இடத்தை அதே பகுதியைச் சேர்ந்த 84 பேர் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து விளை நிலமாகவும், வீடு கட்டி ஆக்கிரமித்துள்ளதாக கூறி மாவட்ட நிர்வாகம் அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, ஆக்கிரமிப்பு அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள், சில மாதங்களுக்கு முன் நிலம் மற்றும் வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
ஆனால், அவர்கள் இடத்தை காலி செய்ய மறுத்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.
இதற்கிடையே, அப்பகுதியில் இருந்து விவசாயிகளை அகற்ற கலெக்டர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விவசாயிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவை யில் உள்ளது. அதன் பேரில், ஆக்கிரமிப்பு தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.
கடந்த 15ம் தேதி, சிதம்பரத்தில் நடந்த அரசு விழாவில், பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், குறிஞ்சிப்பாடி தொகுதி, கொடுக்கன்பாளையத்தில் தொழிற்சாலை அமைக்கப்படும் எனக் கூறினார்.
முதல்வர் அறிவித்த தொழிற்சாலை அமையும் இடத்தில் வசிக்கும் மலையடிக்குப்பம் கிராம மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 3ம் நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, ஆக்கிரமிப்பை அகற்ற கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா, ஏ.டி.எஸ்.பி.,கோடீஸ்வரன், டி.எஸ்.பி., ராஜா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு ரமேஷ்பாபு, விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி, அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத், பா.ம.க., மாவட்ட தலைவர் கோபிநாத் ஆகியோர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், மீண்டும் விவசாயிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறி ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதன்பேரில், ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் அவகாசம் வழங்கினர்.