/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்தடையை கண்டித்து மறியல்: 50 பேர் மீது வழக்கு
/
மின்தடையை கண்டித்து மறியல்: 50 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 16, 2025 06:51 AM
பெண்ணாடம் : மின்தடையை கண்டித்து நள்ளிரவில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பெண்ணாடம் பேரூராட்சி, அம்பேத்கர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ராஜா, மணிகண்டன், தமிழரசன், பிரசாந்த், வெங்கடேசன் உட்பட 50க் கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நள்ளிரவு அனுமதியின்றி விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணா டம் போலீசார், ராஜா உட்பட 50 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

