ADDED : ஆக 25, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரை கண்டித்து அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய வந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி, மனு அளிக்க வந்த அரசியல் கட்சியினரை அவமதித்ததை கண்டிப்பது. கடலுார் நுகர்வோர் கோர்ட் திருவண்ணாமலைக்கு மாற்றம் செய்வதை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தி.மு.க.,–காங்.,–மா.கம்யூ.,–இந்திய கம்யூ.,–ம.தி.மு.க.,– வி.சி.,–மக்கள் நீதி மய்யம் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் வரும் 1ம் தேதி கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் போராட்டம் நடக்கிறது.
