/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2025 05:42 AM

கடலுார்: கடலுார் அடுத்த நொச்சிக்காடு கிராமத்தில், சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து பா.ம.க., மற்றும் பசுமைத்தாயகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் அடுத்த நொச்சிக்காடு, தியாகவல்லி, குடிகாடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களிலிருந்த, 1000 ஏக்கர் நிலம் சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டது. இதைக்கண்டித்து நேற்று முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, நொச்சிக்காடு கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து உரையாடினார். தொடர்ந்து சிப்காட் விரிவாக்கத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.க., கடலுார் கிழக்கு மாவட்டசெயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, மாநில நிர்வாகிகள் தாமரைக்கண்ணன், தர்மா, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் மற்றும் பா.ம.க., பசுமைத்தாயக நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி கூறுகையில், 'சிப்காட்டினால் ஏற்கனவே இப்பகுதியில் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சிப்காட்டே தேவையில்லை எனும் மக்களுக்கு, சிப்காட்டின் விரிவாக்கத்தை அரசு கொண்டு வர முயற்சிப்பது தவறானது,'என்றார்.

