/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
/
பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனர்கள் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 12, 2025 11:40 PM

சிதம்பரம்; சிதம்பரத்தில் அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பில் காஸாவில் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் மேலவீதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் ஈத்கா கமிட்டி தலைவர் ஜாகிர்உசேன் தலைமை வகித்தார்.
லால்கான் பள்ளிவாசல் தலைவர் ஜவகர் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் மக்கள் நல குழு மாநில துணைத்தலைவர் மூசா பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து விளக்கி பேசினார்.
பள்ளிவாசல் தலைவர்கள் முகமதுஹலிம், நஜ்முதீன், கமலுதீன் உள்ளிட்ட சிதம்பரம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இஸ்ரேலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.