/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
/
வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 26, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம், பாலக்கரையில் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் அனைத்து பள்ளிவாசல்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முபாரக் அலி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேட்டு முகமது வரவேற்றார். அனைத்து பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள், நிர்வாகிகள், ஜமாத்தார்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். அதில், வக்ப் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக, ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.