/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவிலில் போராட்டம் : திருவந்திபுரத்தில் பரபரப்பு திருவந்திபுரத்தில் பரபரப்பு

ADDED : டிச 03, 2025 06:14 AM

கடலுார்: கடலுார் திருவந்திபுரம் கோவிலில் 'திடீர்' போராட் டத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கடலுார் திருவந்திபுரம் கோவிலில் நேற்று காலை 10:30மணிக்கு, தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர்,50; என்பவர் 'திடீர்' போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து கோவில் பணியாளர்கள் அவரிடம் கேட்டபோது, 'அரசே மணல் குவாரி யை நடத்த வேண்டும்; பொதுமக்களுக்கு மலிவுவிலையில் மணல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; கனிமத்தை வீணாக்கக்கூடாது; என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை துவக்கி உள்ளதாக தெரிவித்தார்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைஅதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும். அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பினர் .
இதையேற்று அவர் போராட்டத்தைக்கைவிட்டு சென்றார்.