/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டனில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
வெலிங்டனில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வெலிங்டனில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வெலிங்டனில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2025 06:43 AM

திட்டக்குடி: வெலிங்கடனில் நீர் தேக்கத்தில் தண்ணீர் வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளை கண்டித்து, வெலிங்டன் நீர்த்தேக்க மேல்மட்ட பாசன விவசாயிகள் சார்பில் பயண விளக்க ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமிழரசன், மாவட்ட செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர்.
செங்கமேடு கணேசன் வரவேற்றார். விவசாய சங்க நிர்வாகிகள் முருகன்குடி முருகன், செம்பேரி ஆறுமுகம், வெலிங்டன் நீர்த்தேக்க சிறுகுறு விவசாயிகள் சங்க தலைவர் பேரின்பம் உட் பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
இதில்,விருத்தாசலம் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வெலிங்டன் நீர்த்தேக்க மேல்மட்ட கால்வாய் பாசனம் பெறும், 2வது கிளை பகுதியில் வடகிழக்கு பருவமழையை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நடவு செய்துள்ளனர்.
தற்போது நீரின்றி நெல் வயல்கள் காய்ந்து வருவதை தடுக்க பலமுறை நீர்த்தேக் கத்தில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நெற்பயிர்களை காப்பாற்ற தமிழக முதல்வரிடம் நீதி கேட்டு 'பாத யாத்திரை' பயணம் மேற்கொள்வது உட்பட பல்வேறு கோரிக்கைக ள் வலியுறுத்தப்பட்டன.
செங்கமேடு பாலமுருகன் நன்றி கூறினார்.

