ADDED : பிப் 14, 2026 03:48 AM

அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் காந்தி சிலை அருகில், மத்திய அரசு மற்றும் அ.தி.மு.க.,வை கண்டித்து, இண்டி கூட்டணி சார்பில், நேற்று முன்தினம் காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். காங்., மாவட்ட தலைவர் சித்தார்த்தன், நகர தலைவர் மக்கின், பொதுக்குழு உறுப்பினர் ராதா , தி.மு.க., பொதுக் குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியம், இளங்கோவன் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்வளவன், மா.கம்யூ., நகர செயலாளர் ராஜா, நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
