/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உணவு கிடைக்காததால் நெல்லிக்குப்பத்தில் மறியல்
/
உணவு கிடைக்காததால் நெல்லிக்குப்பத்தில் மறியல்
ADDED : டிச 04, 2024 09:38 AM

நெல்லிக்குப்பம் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு கிடைக்காததால், நெல்லிக்குப்பத்தில் பெண்கள சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்ணீர் சூழ்ந்த பகுதி மக்கள், பல்வேறு இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அந்த வகையில், வான்பாக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள ஆர்.ஆர்.பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று மதியம் 2:00 மணி வரை உணவு வழங்கவில்லை என, தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 500 க்கும் மேற்படடோர், கவுன்சிலர் ஹேமாவதி தலைமையில், போலீஸ் நிலையம் எதிரே, கடலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, 4 பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கமிஷனர் கிருஷ்ணராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சரியான நேரத்துக்கு உணவு வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை வாபஸ் பெற்றனர். இதனால் மதியம் 2:00 மணி முதல் 3:20 வரையில், கடலுார்- பண்ருட்டி சாலையில் போக்குவரத்து பாதித்தது.