/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனி மாவட்ட கோரிக்கை விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
/
தனி மாவட்ட கோரிக்கை விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
தனி மாவட்ட கோரிக்கை விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
தனி மாவட்ட கோரிக்கை விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 11, 2026 06:43 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் பாலக்கரையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் தனவேல் தலைமை தாங்கினார். நிர்வாக குழு கண்ணன், சாரதி, வேளையன், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ., மூத்த நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார். விருத்தாசலத்தில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற, 100 நாட்களில், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்து, இதுவரை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலர் சுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாநில துணை பொதுச்செயலர் கதிர்காமன், இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்ட செயலர் கோகுலகிறிஸ்டீபன், இந்திய குடியரசு கட்சி மங்காபிள்ளை, செந்தமிழ் வேளாண் நடுவம் முருகனன், மாந்த நேயம் பேரவை பஞ்சநாதன், வி.சி., தென்றல், தமிழ்நாடு விவசாய சங்கம் குஞ்சிதபாதம், வேல்முருகன் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.
மேலும், விருத்தாசலத்தில் உள்ள அமைச்சர் கணேசன் வீட்டை முற்றுகையிட போவதாக கூறி கலைந்து சென்றனர்.

