UPDATED : அக் 07, 2026 02:21 AM
ADDED : அக் 06, 2026 06:47 PM

கடலுார்: கடலுார் கெடிலம் ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதை கண்டித்து குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலுார் கோண்டூர் ரெயின் பேர் நகர், அருணாச்சலம் நகர், மீரா கிருஷ்ணா நகர், பழனி ஆண்டவர் சிட்டி நகர் பகுதிகளை உள்ளடக்கிய 'ராம்ப்' குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் பாலு தலைமையில் செயலாளர், கோபிநாத், முகமது ெஷரீப் உட்பட 30க்கும் மேற்பட்டோர் நேற்று ரெயின்போ நகர் கெடிலம் ஆற்றங்கரையில் திரண்டனர்.
பின், கடலுார் கெடிலம் ஆற்றில் ஆலை கழிவுகள் கலப்பதால் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நிலத்தடிர் நீர் மாசு ஏற்படுகிறது. ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளதால் மழைக் காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழம் அபாயம் உள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வலியுறுத்தி கோஷமிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
