ADDED : ஜன 16, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த தம்பிப்பேட்டையில் பொங்கல் பண்டிகையையொட்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, கீதா சிவமணி தலைமை தாங்கினர்.
தம்பிபேட்டை, கேசவ நாராயணபுரம், த.பாளையம், தையல்குணம் பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி, முதியோர், பொதுமக்களுக்கு பொங்கலை முன்னிட்டு நல உதவிகள் வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா, செந்தில்நாதன், வைத்தியநாதன், ஜோதிடர் பாலமுருகன், சஞ்சீவி பொட்டிக் உரிமையாளர் பாலாஜி நித்யா, அப்துல்கலாம் மாற்றுத்திறனாளி நல சங்க தலைவர் சந்தோஷ்குமார், செயலாளர் குணசீலன், துணைத்தலைவர் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

