/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி மாணவிகளுக்கு ஏ.டி.எம்., வழங்கல்
/
கல்லுாரி மாணவிகளுக்கு ஏ.டி.எம்., வழங்கல்
ADDED : டிச 31, 2024 06:42 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி மாணவிகளுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
புதுமைப்பெண் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம்., கார்டு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், பொருளியல், வணிக நிர்வாகம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் பயிலும் 178 மாணவிகளுக்கு ஏ.டி.எம்., கார்டு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணகி, தமிழ்ப்புதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மூத்த பேராசிரியர்கள் கருணாநிதி, சுகந்தி உட்பட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.