ADDED : ஜன 10, 2026 06:08 AM

விருத்தாசலம்: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், மதிய உணவு வழங்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கலியன் மனைவி சரோஜா அம்மாள் படத்திறப்பு விழா நேற்று காலை நடந்தது. மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வேளாண் ஆசிரியர் பாபாஜி வரவேற்றார்.
கோமங்கலம் மின்வாரிய உதவி பொறியாளர் வேல்முருகன், ஆசிரியர் சங்கீதா, சிறுவம்பார் பள்ளி தலைமை ஆசிரியர் மலர்விழி, மாத்துார் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் சிவசங்கரன், வனத்துறை அலவலர் அருள்காந்தி, ஆசிரியர் வேல்விசாலாட்சி, சிவகுருநாதன் முன்னிலை வகித்தனர்.
கார்குடல் துவக்கப் பள்ளி மற்றும் கோ.ஆதரனுார் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு, அ.தி.மு.க., கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் சவுந்தரராஜன் கல்வி உபகரணங்கள் வழங்கினார். மேலும், கார்குடல் கிராம மகளிர் 400 பேருக்கு சேலை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலமேகம், ஏழுமலை, ராமச்சந்திரன், சக்திவேல், ஜெகஜீவராமன், ஜெய்சங்கர், பாண்டியன், வினோத்குமார், ஞானபிரகாசம் மற்றும் மின்வாரிய உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஜாபர்அலி, ஜம்புலிங்கம், பீட்டர், வினோத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
