/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
/
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
ADDED : நவ 22, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு முத்தையன். இவரது, கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேற்று பாண்டியன் எம்.எல்.ஏ., நேரில் சென்று ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார்.
மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், ஒன்றிய அவைத் தலைவர் ரெங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், கூட்டுறவு வங்கி முன்னாள் துணை தலைவர் கோதண்டம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேஷ், அஞ்சலி ஞானதேசிங்கு உட்பட பலர் பங்கேற்றனர்.