ADDED : டிச 14, 2024 06:51 AM

அ நிறம் | அளவு
பெண்ணாடம்: கோனுாரில் மழையால் பாதித்த குடும்பங்களுக்கு, அ.தி.மு.க., நல்லுார் தெற்கு ஒன்றியம் சார்பில், நிவாரண உதவி வழங்கப்பட்டது.
பெண்ணாடம் அடுத்த கோனுார் கிராமத்தில் தொடர் கனமழை காரணமாக இங்குள்ள ஓடை, ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஊருக்குள் புகுந்தது. இதனால், கிராமத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளில் அதிகாலை முதல் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து, மழையால் பாதித்த குடும்பங்களுக்கு நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பிரட், பிஸ்கட், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன், ஊராட்சி தலைவர் கனிமொழி முருகன், ஊராட்சி செயலர் தனம் சாந்தப்பன், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராமலிங்கம், கிராம மக்கள் உடனிருந்தனர்.
