/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குவைத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல்
/
குவைத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல்
குவைத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல்
குவைத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கல்
ADDED : ஜன 28, 2025 04:55 AM

விருத்தாசலம், : குவைத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியை, அமைச்சர் கணேசன் வழங்கினார்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை ஜூனைத் அஹமது, 45, முஹம்மது யாசின், 32. குவைத்தில் பணிபுரிந்து வந்தனர். கடந்த 18ம் இரவு, கரி மூலம் நெருப்பு மூட்டி, கதகதப்பில் உறங்கியபோது, புகை அதிகமாக வெளியேறியதால், இருவரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
இதில், மங்கலம்பேட்டை ஜூனைத் அஹமது, முஹம்மது யாசின் ஆகியோரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால், இருவரது குடும்பத்தினரும் தமிழக அரசின் நிவாரண உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின், பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் நிதி அறிவித்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் இருவரது வீட்டிற்கும் சென்று, காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், ஆர்.டி.ஓ., அழகர்சாமி, தாசில்தார் உதயகுமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், கனககோவிந்தசாமி, சுரேஷ், பேரூர் செயலாளர் செல்வம், நகர துணை செயலாளர் ராமு, இளைஞரணி செயலாளர் தர்மமணிவேல், துணை செயலாளர் வசந்தகுமார் உடனிருந்தனர்.

