/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஜயகாந்த் நினைவாக நலத்திட்ட உதவி வழங்கல்
/
விஜயகாந்த் நினைவாக நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 13, 2024 05:43 AM

கடலுார்: விஜயகாந்த் நினைவாக, கடலுாரில் தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நினைவாக கொடி நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலுார் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கி, கட்சி கொடியேற்றினார். மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், பொருளாளர் ராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
மாவட்ட துணை செயலாளர்கள் சித்தநாதன், பாலமுருகன், வேல்முருகன், சிவரஞ்சினி, ஜெய்சங்கர், விவசாய அணி அய்யப்பன், வக்கீல் அணி பிரபாகர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், குமரேசன், தென்னரசு, சுரேஷ்குமார், சிவராமன், செல்வமணி, வேல்முருகன், செம்பை, ஜெயக்குமார், சேகர், தனசேகர், நகர செயலாளர்கள் ராஜ்குமார், கவிதா கஜேந்திரன், சேகர், ஜாகிர் உசேன், சரவணன், அய்யனார், ஒன்றிய நிர்வாகிகள் ராஜா, செல்வகணபதி, மோகன்பிரபு, மாநகர நிர்வாகிகள் பக்கிரி, தர்மபாலன், பழனியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.