/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பு.முட்லுார் பள்ளி முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
பு.முட்லுார் பள்ளி முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பு.முட்லுார் பள்ளி முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பு.முட்லுார் பள்ளி முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : நவ 02, 2024 07:30 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி யில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1996- 2002ம் ஆண்டு மாணவர்கள், நண்பர்கள் குழு 96 என்று துவக்கி, பு.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பேட்டரி சைக்கிள், வேட்டி, புடவை, உணவு, தண்ணீர் பாட்டில், இனிப்பு காரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா,நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல சங்க பாதுகாப்பு அமைப்பின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் அருள்முருகன், உதவி தலைமை ஆசிரியை விதுபாலா மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.