/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்
/
அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்
அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்
அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்
ADDED : ஜன 12, 2024 03:58 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளிக்கு, பெடரல் பாங்க் மற்றும் விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம் ஆகியன சார்பில், கம்ப்யூட்டர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ்சந்த் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், வர்த்தக சங்க தலைவர் கோபு, செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகமது, மாநில துணை தலைவர் பழமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் செல்வக்குமாரி வரவேற்றார்.
ேஹாட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் முத்துசாமி, அக்வா டெக் ஆர்வோ ப்ரோமோட்டர்ஸ் மஞ்சப்பன் முன்னிலையில், பெடரல் வங்கி மண்டல மேலாளர் மீனாட்சி சுந்தரம், கிளை மேலாளர் அஜய் விஷ்ணு ஆகியோர் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான 10 கம்ப்யூட்டர்கள், 1 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை பள்ளிக்கு வழங்கினர். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
உதவி தலைமையாசிரியர் கலைவாணி நன்றி கூறினார்.

