/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் மினிடேங்க் அரசு பள்ளிக்கு வழங்கல்
/
குடிநீர் மினிடேங்க் அரசு பள்ளிக்கு வழங்கல்
ADDED : செப் 11, 2025 11:16 PM

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த தொரவளூர் அரசு மேல்நிலை பள்ளியில், விருத்தாசலம் எலைட் ரோட்டரி சங்கம் சார்பில்,குடிநீர் மினி டேங்க் அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர், ராஜா ஜூவல்லரி உரிமையாளர் குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார், உதவி ஆளுனர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் குருசாமி வரவேற்றார்.
நகர அனைத்து வர்த்தகர் சங்க தலைவர் கோபு, செயலர் மணிவண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கீதா அருளரசன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அருளரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
வர்த்தகர் சங்க மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், பெற்றோர் அசிரியர் சங்க பொருளாளர் வீரமுத்து, இளங்கோவன், சுப்ரமணியன், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.